அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!-நவநீதம்பிள்ளை- பிரபாகரனால் முடியாததை நவனீதம்பிள்ளை முயற்சி செய்கிறார்
28 Jul,2014
தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிராகரித்துள்ளார்.
அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற டோக் டு அல் ஜெசீரா நிகழ்ச்சியின் போது நவநீதம்பிள்ளை தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நவநீதம்பிள்ளையின் பயணம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
தாம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த சாட்சிகளின் தகவல்கள் அடிப்படையிலேயே தமது அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நவநீதம்பிள்ளை இதன்போது குறிப்பிட்டார்.
பிரபாகரனால் முடியாததை நவனீதம்பிள்ளை முயற்சி செய்கிறார்: அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஒரு காட்சியாகும்(Show) என்று அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இந்த விசாரணையின் முடிவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனால் செய்ய முடியாததை நவநீதம்பிள்ளை வேறு வழிகளால் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அரசாங்கம் இந்த முயற்சியை முழுமையாக நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையில் அனைத்து பொறிமுறைகளும் இருக்கும் போது ஏன்? வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்