கொழும்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக யாழ்.கு டாநாட்டிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களை வவுனியா-ஓமந்தை வரையில் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்த நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தினுள் போதைப் பொருள் காணப்பட்டதாக கூறி வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
யாழ்.குடாநாட்டிலிருந்து 16 ஊடகவியலாளர்கள் கொழு ம்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்காக (வெள்ளிக்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு சென்றிருந்தனர்.
இந்நிலையில் யாழ்.நகரப் பகுதியிலி ருந்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு 7மணியளவில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆனையிறவில் மறிக்கப்பட்டபோது வாகனத்தை நிறுத்தவில்லை. எதற்காக நிறுத்தாமல் சென்றீர்கள் என வினவியுள்ளதுடன் வாகனத்தை சோதனையிடவும் முயன்றுள்ளனர். ஆனால் ஆனையிறவில் வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகின்றன.
மேலும் தாங்கள் பயணித்த வாகனத்தை அவ்வாறு வழிமறிக்கவில்லை. எனவும் ஊடக வியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குச் சென்றபோது அங்கே சிவில் உடையில் இரு பொலிஸாரும் 3படையினரும் வாகனத்தை சோதனையிடப் போவதாக கூறியுள்ளனர்(இந்தச் சோதனைச் சாவடியில் சிவில் உடையில் பொலிஸார் நிற்பதில்லை)
அவர்கள் சோதனையிட முயன்றபோது படைச் சிப்பாய் ஒருவர் வாகனத்தின் சாரதி ஆசனத்திற்கு கீழ் ஏதோ ஒன்றினை போட்டதை ஊடகவியலாளர் ஒருவர் பார்த்துள்ளார். அதனை என்ன? என பார்ப்பதற்கு முன்னர் அங்கே நின்ற பொலிஸார் சாரதி ஆசனத்திற்கு கீழ் இருந்து ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதனுள் கஞ்சா இருப்பதாக கூறி வாகனத்தையும் ஊடகவியலாளர்களையும் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
பின்னர் ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னர் சாரதியை தாம் கைது செய்யப் போவதாகவும் ஊடகவியலாளர்களை அங்கிருந்து செல்லுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலை யில் சாரதி கைதுசெய்யப்பட்டால் படைச்சிப்பாய் கஞ்சாவை வாகனத்திற்குள் கொண்டுவந்து வைத்தமையினை நாம் நீதிமன்றில் கூறுவோம் என ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் அங்கே சோதனையிட்ட படைச்சிப்பாயை தற்போது விசாரணைக்குட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(2ம் இணைப்பு)நடு வீதியில் கைவிடப்பட்ட ஊடகவியலாளர்கள்
குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி ஊடகவியலாளர்களை விடுதலை செய்ததுடன் அவர்களை காவல்துறை வளாகத்துக்கு வெளியே செல்லுமாறு பணிக்கப்பட்டு தற்போது நடு வீதியில் நிற்கின்றனர்.
இந்திலையில் வாகனத்தின் சாரதி தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சாரதியை விடுதலை செய்வதுடன் தொடர்ந்து தாம் பயணிக்க வேண்டும் எனக்கோரி தற்போது ஓமந்தை சிறீலங்கா காவல்துறை வளாகத்தின் முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்து பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் அறிக்கை
சிறிலங்காவில் தமிழர்கள் மீது இன வன்முறைகள் ஏவிவிடப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்து, பிரித்தானிய தொழற்கட்சித் தலைவர் எட் மில்லிபான்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கவலைக்குரிய வன்முறைகளால், தமிழர்களான ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் உயிரிழந்ததையும், இடம்பெயர்ந்ததையும், புலம்பெயர்ந்ததையும் நினைவு கூரும் வகையில் இந்த மாதம், கறுப்பு ஜூலையாக நினைவுகூரப்படுகிறது.
எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கை சரியாகத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், வன்முறைகளின் நினைவுகள் இன்னமும் உயிர்வாழ்கின்றன.
அதை ஒரு போதும் நாம் மறுந்து விடக் கூடாது என்பது முக்கியம்.
நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய, முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணை, ஒரு சிறிய நகர்வாக அமையும்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.