பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கில் நால்வருக்கு 20 வருட சிறை தண்டனை! வழக்கு தீர்ப்பு குறித்து பிரித்தானியா திருப்தி
18 Jul,2014
தங்காலை பகுதியில் பிரித்தானியப் பிரஜை ஒருவரை கொலைசெய்தமை மற்றும் அவரது பெண் தோழியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நால்வருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தங்காலை முன்னாள் பிரதேசசபைத் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப உள்ளிட்ட அறுவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு கடந்த இரண்டரை வருடங்களாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் தங்காலை முன்னாள் பிரதேசபைத் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு மேல் நீதிமன்றத்தினால் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு ஏனைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குர்ஹாம் சாக்கீ கொலை வழக்கு தீர்ப்பு குறித்து பிரித்தானியா திருப்தி
பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ கொலை வழக்குத் தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பானது சாக்கீயின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறதல் அளிக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குர்ஹாம் சாக்கீ கொலை தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம் தொழில்சார் தன்மை மற்றும் நேர்மைத் தன்மை ஆகியனவற்றுடன் செயற்பட்டுள்ளதாகவும் அதற்காக நன்றி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரண உள்ளிட்ட நான்கு பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வழக்குத் தொடரப்பட்ட இரண்டு பேர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்திய செய்திகள்இலங்கை - இந்தியா இடையேயான தற்போதைய சர்வதேச கடல் எல்லைக்கோட்டை நிராகரிக்கக் கோருகிறார் ஜெயலலிதா!
alt"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய சர்வதேச எல்லைக்கோட்டை இந்தியா அங்கீகரிக்கக்கூடாது. அதை நிராகரிக்கவேண்டும்.
யாழ் காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிறுமி துஷ்பிரயோகம் 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில்
யாழ் காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.