திருகோணமலையில் சீனாவிற்கு 1200 ஏக்கர் காணி வழங்கியது இலங்கை!
17 Jul,2014
திருகோணமலை மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் உள்ளிட்ட 1200 ஏக்கர் காணிப்பரப்பு சீனாவின் பாதுகாப்பு சம்பந்தமான அபிவிருத்திப் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சீனா சென்றிருந்த போது, இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள ஒருமுக்கிய பகுதியும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது சிங்கள படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இராணுவத் தளமாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் நகர்ப்பகுதியில் உள்ளிட்ட 1200 ஏக்கர் காணிப்பரப்பு சீனாவின் பாதுகாப்பு சம்பந்தமான அபிவிருத்திப் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சீனா சென்றிருந்த போது, இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சீன அரசாங்கம் இராணுவத் தளம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அங்கு இராணுவத் தளம் அமைக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் விரைவில் இந்தியா சிறிலங்காவிடம் எதிர்ப்பினைத் தெரிவிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.