துருக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 14 பேர் பலி
16 Mar,2023
துருருக்கியில் சமீபகாலமாக இயற்கையின் சீற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் கூடாரங்களில் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.