ஜோர்ஜியாவில் துப்பாக்கிப் பிரயோகம்: ஐவர் பலி
21 Jan,2023
ஜோர்ஜியாவில் ஒரு நபர் இன்று நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் கருங்கடலுக்கு அருகிலுள்ள ஜோர்ஜியாவின் சகேரெஜோ நகரில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் படை வீரரான நபரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். இதனால் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1974 ஆம் அண்டு பிறந்த மேற்படி ஆயுததாரி , 2006 முதல் 2024 ஆம் ஆண்டுவரை இராணுவத்தில் பணியாற்றியவர் என ஜோர்ஜிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.