ஐரோப்பிய நாடான போலந்தில், கடும் புயல்
25 Jul,2022
மற்றும் பலத்த மழை காரணமாக, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
போலந்தின் கிழக்கு, தெற்கு மாகாணங்களில், நேற்று முன்தினம் கடும் புயலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. மசோவா மாகாணத்தின் வார்சா பகுதி, வெள்ளக் காடாக மாறியது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், நகரம் இருளில் மூழ்கியது.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.'மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்து உள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன' என்றனர்.