விமானதளத்தை கைப்பற்றிஐ.எஸ்.ஐ.எஸ்.
காஸா மக்கள் வெளியேற இஸ்ரேல் பிரதமர் வேண்டுகோள்
25 Aug,2014

சிரியா ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். விமானம் தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக நடந்த சண்டையில் இரதரப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் அமெரிக்க பத்திரிகை நிருபர் தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஈராக்கிலும் சரி, வேறு எங்கும் சரி, நம்மவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறார்கள். என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவிலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் சிரியா ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று நடைபெற்ற கடும் சண்டையின் இறுதியில் தீவிரவாதிகள் விமானதளத்தை கைப்பற்றிவிட்டனர்.
விமான தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து நேற்று வரையில் நடைபெற்ற சண்டையில் சுமார் 346 தீவிரவாதிகள் மற்றும் 170க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து தாப்கா விமானத் தளத்தை கைப்பற்றுவது தொடர்பான சண்டையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத் தளம் மட்டுமே அப்பகுதியில் ராணுவம் பிடியில் இருந்தது. அதனையும் தீவிரவாதிகள் தற்போது தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
தீவிரவாதிகள் நிலையாக இருக்கும் ராக்கா சிட்டி அருகே விமானதளம் கைப்பற்றப்பட்ட வெற்றி கொண்டாடப்பட்டுள்ளது. பல்வேறு மசூதிகளில் விமானதளம் கைப்பற்றப்பட்ட செய்திகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா ராணுவ வீரர்களின் தலைகளையும் தீவிரவாதிகள் காண்பித்துள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக சண்டை நடைபெற்றபோது சிரியா ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும், ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சிரியா ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பின்வாங்கிய சிரியா ராணுவ வீரர்கள் 150 பேரை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இப்பகுதியில் கடந்த ஒரு வாரங்களில் பல்வேறு ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் அங்கியிருந்த ஆயுதங்களை கொண்டு மேலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் தளங்களில் இருந்து காஸா மக்கள் வெளியேற இஸ்ரேல் பிரதமர் வேண்டுகோள்
எகிப்தில் நடந்து வந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இஸ்ரேல்-காஸாமுனை இடையே மூர்க்கத்தனமாக சண்டை நடந்து வருகிறது. காஸாவில் 13 மாடி மக்கள் குடியிருப்பு ஒன்றை இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சு நடத்தி தகர்த்தன.. இது ஹமாஸ் திவீரவாதிகளின் கட்டளை மையமாக செயல்பட்டு வந்தது.இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பாலஸ்தீனிய மக்கள் தீவிரவாதிகளின் இடங்களை விட்டு வெளியேற வேண்டும் விரைவில் அங்கு தாக்குதல்கள் நடத்தபட்டும் எனஎச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பயங்கவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஹமாஸ் தீவிரவாதிகளின் தளங்களில் இருந்து வெளியேற காஸா மக்களை கேட்டு கொள்கிறேன்.அவர்களின் இடங்கள் ஒவ்வொன்றும் எங்கள் இலக்குகள் ஆகும் என மந்திரி சபை கூட்டத்தில் கேட்டு கொண்டு உள்ளார்.
இது குறித்து ஹமாசின் செய்தி தொடர்பாளர் அபு ஜூஹ்ரி கூறும் போது இஸ்ரேலிய பிரதமரின் இந்த எச்சரிக்கை அவர்கள் காஸா மக்களுக்கு எதிராக போர்குற்றங்களில் ஈடுபடுவதற்கு ஒரு உதாரணமாகும் என்று கூறினார்.