அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 120 பேர் படுகாயம்
24 Aug,2014

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 120 பேர் படுகாயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 120 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். கட்டடங்கள் பலமாக குலுங்கின. நிலநடுக்கத்தினால் அதிக கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. உடனடியாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்தனர். விரைந்து வந்த மீட்பு குழுவினர் கட்டங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 120 பேர் காயம் அடைந்துள்ளார்.
காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் தீ விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தீ விபத்தில் சிக்கிய கட்டடங்கள், வாகனங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எரிவாயு குழாய்களும் சேதம் அடைந்துள்ளன. அங்கு தொடந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வாலபரஸோ பிராந்தியத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் சாண்ட்டியாகோவில் இருந்து சுமார் 118 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹஸியெண்டா லா கலேரா என்ற பகுதியை மையமாக வைத்து சுமார் 18 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதி பூமியின் சுமார் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாகவும், ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.6 என பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 10.32 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமைகள் இழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை