
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பத்திரிகை நிருபர் ஜேம்ஸ் போலே (வயது 40). இவர் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் 22–ந் தேதி முதல் திடீரென மாயமானார்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் மாயமான நிருபர் ஜேம்ஸ் போலே தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம்பெற்றிருந்தது. ‘அமெரிக்காவுக்கு ஒரு தகவல்’ என அந்த வீடியோவுக்கு பெயரிடப்பட்டு இருந்தது..
அதில் அவர், ‘ஈராக்கில் அமெரிக்க ராணுவம் குண்டு வீசி தாக்குகிறது. அப்பாவி மக்கள் சாவுக்கு காரணமாக உள்ளது. இந்த தாக்குதலை நிறுத்த வேண்டும். எங்களின் வாழ்வுரிமையையும், பாதுகாப்பையும் மறுத்தால் உங்கள் மக்கள் ரத்தம் சிந்துவார்கள். அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்ந்து மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் உயிர்பிழைப்பார். அது உங்கள் கையில் உள்ளது’ என்று தெரிவிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஜேம்ஸ் போலேவை தலை துண்டித்து கொலை செய்தது இங்கிலாந்தை சேர்ந்த ஜிகாதியாக இருக்கலாம் ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர்வாதிகளின் பிடியில் இருந்து மீண்ட ஒருவர் அளித்த தகவலின்படி, தன்னை ஜான் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோவில் உள்ள அந்த தீவிரவாதி பிரிட்டிஷ் ஜிகாதிகளின் ரிங் லீடர் என கூறப்படுகிறது.
அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ-யுடன் இணைந்து பிரிட்டனின் எம்-15 புலனாய்வு நிறுவனமும், ஸ்காட்லாந்து நிறுவன போலீசாரும் போலே தலையை துண்டிக்கும் தீவிர்வாதியை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜேம்ஸ் போலே வீடியோவை ஆய்வு செய்து தீவிரவாதி பேசுவது லண்டன் ஆங்கில உச்சரிப்பு போல் உள்ளது என மொழியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜான் சில தீவிரவாத செயலகள் தொடர்பான குற்ற செயலகளில் ஈடுபட்டு இருந்தார் என ஸ்கார்ட்லாந்து அறிக்கை கூறுகிறது.
இங்கிலாந்தில் பிறந்த 500-க்கு மேற்பட்டோர் ஜிஹாத்திகளாக உருமாறி சிரியா, ஈராக் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது விடுமுறை நாட்களை
குறைத்து கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர்வாதிகள் விவகாரம் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இது உண்மையாக இருந்தால் ஜேம்ஸ் போலே கொலை அதிர்ச்சி மற்றும் வக்கீரமான செயல் என டுவீட்டரில் தகவல் வெலீயிட்டு உள்ளார்.
அமெரிக்க பத்திரிகையாளரை கொலை செய்வதற்கு முன்னதாக பணயத்தொகை கேட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்
அமெரிக்க பத்திரிகையாளரை கொலை செய்வதற்கு முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயத்தொகை கேட்டு வலியுறுத்தியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாயமான நிருபர் ஜேம்ஸ் போலே தலை துண்டித்து கொலை செய்த வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர். ‘அமெரிக்காவுக்கு ஒரு தகவல்’ என அந்த வீடியோவுக்கு பெயரிட்டு தீவிரவாதிகள் அதனை வெளியிட்டனர்.
அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது, உலகையே உலுக்கி உள்ளது. போலேயை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகள், அவரை உயிருடன் விடுவிக்க அமெரிக்காவிடம் ஒரு பெருந்தொகையை பணயத்தொகையாக கேட்டதாகவும், அதை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டதாகவும், போலே குடும்பப் பிரதிநிதியும், அவரோடு தீவிரவாதிகளிடம் பிடிபட்டிருந்த பணயக்கைதி ஒருவரும் தெரிவித்தனர். இதற்கிடையே போலேயையும், பிற அமெரிக்க பணயக்கைதிகளையும் மீட்க அமெரிக்கா கடந்த கோடை காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகவும் இப்போது தெரிய வந்துள்ளது.
மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் ஷாட்ஆப் என்பவரும் கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் மாயமானார். அவரும் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்ந்து மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் உயிர்பிழைப்பார். அது உங்கள் கையில் உள்ளது. என்று தெரிவிக்கும் காட்சியும் தீவிரவாதி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும் காட்சி வீடியோவில் இடம் பெற்றுள்ளது.