
மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவில் தலைநகரில் எபோலா நோய்க்கு இதுவரை எபோலோ வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 460 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், எபோலா நோய் தலைநகரில் பரவுவதை தடுக்க 50 ஆயிரம் பேர் வசிக்கும் குடிசைப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் எலன் ஜான்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.
பரிசோதனை நிலையில் உள்ள மருந்தை 3மருத்துவ ஊழியர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. மருந்துக்காக மக்கள் வெளியே கூடினால் நோய் பரவ வாய்ப்பு என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.
இஸ்ரேல்- காஸா சண்டை நிறுத்தம் தோல்வி ஹமாஸ் ராணுவ தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சி, எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
இவ்விரு தரப்புக்கும் இடையே அமல்படுத்தப்பட்டிருந்த 5 நாள் சண்டை நிறுத்தம், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சண்டை நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலைமை நீடிக்கிறது.
இந்த நிலையில் போர் நிறுத்தம் தோல்வியில் முடிவடைந்தது. காஸா நகரம் மீது இஸ்ரேல் படைகள் வான் வழி தாக்குதல் நடத்தின. இதில் அடையாளம் தெரியாத பெண்ணும் 2 வயது குழந்தையும் கொல்லப்பட்டனர். நகரின் மீது 5 ஏவுகணைகள் வீசப்பட்டதாக பாலஸ்தீன மீடியாக்கள் கூறி உள்ளன. அங்கு ஹமாஸ் ராணுவ தலைவர் வீட்டை குறிவைத்து இந்த தக்குதல் நடந்து உள்ளன.
முகமத் டெய்ப் கடந்த் 20 வருடங்களாக ஹமாஸ் படையில் உள்ளார்.கடந்த 2002 ஆண்டில் அவர் ராணுவ படைத்தலைவராக நியமிக்கபட்டார்.அவரை பலமுறை இஸ்ரேலிய படைகள் கொலை செய்ய முயற்சித்தன. அதில் அவர் உயிர் பிழைத்து உள்ளார். அல் கஸ்ஸம் படைத்தலைவராக இருந்த போது டெய்ப் இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்கு ஆளாகி பலத்த காயம் அடைந்தார்.
காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் மூலம் ஹமாஸ் ராணுவ தலைவர் முகமத் டெய்ப்பை கொல்ல திட்ட மிட்டு உள்ளது என மூத்த ஹமாஸ் தலைவர் மூசா அபு மர்சூக் தெரிவித்து உள்ளார். டெய்ப்பின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை ஆனால் அவரது மனைவி மற்றும் மகள் கொல்லபட்டு உள்ளனர். என தெரிவித்தார்.
ஆனால் இதை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் உறுதிபடுத்தவில்லை, ஆனால் காசா அதிகாரிகள் நேற்று 30 இடங்களை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசப்பட்டு உள்ளது. குறைந்தது. 50 ராக்கேடுகள் விசப்பட்டு இருக்கும்.என தெரிவித்தனர்.
ஹமாஸ் பேச்சு வார்த்தைகளை நிறுத்துவதற்கு ராக்கேடுகளீ வீசி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது.