

தங்கள் மீது அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் வெளியிட்டுள்ள திடுக்கிடும் வீடியோ ஒன்று அமெரிக்க நாட்டையே குலுக்கியுள்ளது. அந்த வீடியோவில் காணாமல் போன அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்யும் வீடியோவும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக் நாட்டிற்கு எதிராக போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்காவின் போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகளை நோக்கி குண்டுமழை பொழிந்து வருகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஈராக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு போட்டோகிராபராக பணிபுரிந்து வரும் James Wright Foley என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்துள்ளனர். கொலை செய்யும் முன் தன்னுடைய மரணம் இராக்கிற்கு ஒபாமா அமெரிக்க படைகளை அனுப்பியதாலே ஏற்பட்டது என்று அவரை தீவிரவாதிகள் பேச வைத்துள்ளனர்.
போட்டோகிராபரை கொலை செய்தபின்னர் அந்த வீடியோவில் முகமூடி அணிந்த தீவிரவாதி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும்போது, "ஈராக்கில் இருந்து விடுதலை பெறுவதற்காக சுதந்திர போராட்டம் நடத்தி வரும் எங்கள் மீது ஒபாமா நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கு நடவடிக்கையாக இந்த போட்டோகிராபரை கொலை செய்ததாகவும், இத்துடன் தாக்குதலை ஒபாமா நிறுத்தாவிட்டால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு அமெரிக்க பத்திரிகையாளரான Steven Joel Sotloff என்பவரையும் கொலை செய்வோம்" என்று மிரட்டலுடன் பேசியுள்ளர்.
இந்த வீடியோவை சமூக இணையதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து அமெரிக்க அரசும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈராக் தீவிரவாதிகள் தாக்குதல் தொடருமா? அல்லது நிறுத்தப்படுமா? என்பது குறித்து அமெரிக்க மக்களிடையே பெரும் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு : அமெரிக்க அதிபர் ஒபாமா மகிழ்ச்சி
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினரிடமிருந்து, மொசூல் அணை கைப்பற்றப்பட்ட தற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈராக்கில், அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம், ஈராக்கில் உள்ள மிகப் பெரிய அணையான, மொசூல் அணையை யும் கைப்பற்றினர். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் அரசுப் படையினர் மற்றும் குர்திஷ் படையினருக்கு, அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள், பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி
வருகிறது. அமெரிக்க படையினரின் ஆதரவுடன், ஈராக் அரசுப் படையினர், குர்திஷ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு, பயங்கரவாதிகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதையடுத்து, மொசூல் அணையை கைவிட்டு தப்பி ஓடினர். மொசூல் அணை, மீண்டும் அரசு படையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது: மொசூல் அணை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது, பயங்கரவாதி கள் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்க படையின் ஆதரவுடன், அந்த அணையை, ஈராக் அரசு படையினர் கைப்பற்றியுள்ளது, சந்தோஷமாக உள்ளது. ஈராக் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அமெரிக்கா தொடர்ந்து செய்யும். அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்கு தலில், பயங்கரவாதி களுக்கு சொந்தமான, 90 இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.
பேரழிவு ஏற்படுத்தும் ரசாயன ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிரியா அரசு மேற்
கொண்டு உள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியா பாக்., உறவு: அமெரிக்கா வருத்தம்
அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு செயலர்களுக்கு இடையே நடந்த பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது, வருத்தம் அளிக்கிறது; இது, துரதிர்ஷ்டவசமானது. இரு நாடுகளும், தங்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்த வேண்டும். அப்போது தான், தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் குறைந்து அமைதி நிலவும். இவ்வாறு, அவர் கூறினார்.