உக்ரைனின் ஜெட் ரக போர் விமானத்தை ரஷ்ய ஆதரவாளர்கள் சுட்டு வீழ்த்தினர்
சீனாவில் நிலநடுக்கம்
17 Aug,2014

உக்ரைன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் ரக போர் விமானத்தை ரஷ்யாவுக்கு ஆதரவான புரட்சிப் படையினர் கிழக்கு உக்ரைன் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தினர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் மாகாணத்தில் அந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த விமானி ‘பாரச்சூட்’ உதவியுடன் தப்பி உயிர் பிழைத்ததாகவும் உக்ரைன் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லியோனிட் மட்யுக்கின் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யாங்ஷான் பகுதியில் காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் யாங்ஷானில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வுஜி நகரில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அண்டை பகுதியான சூஜியாங், டகூன் மற்றும் சென்ஜியாங் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். வீடுகள் சேதம் அடைந்தன. யாங்ஷானில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் 22 முறை பூமி குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 3-ந்தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததோடு, 600 பேர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.