
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வட பகுதியில் உள்ள 15 க்கும் மேற்பட்ட நகரங்களை தங்கள் கட்டுபாட்டில் வைத்து உள்ளனர்.ஈராக்கிற்கு ஆதரவாக அமெரிக்கா தீவிரவாதிகள் மீது வான் வெளி தக்குதல் நடத்தியது. மேலும் குர்தீஷ் படையினருக்கு போர் ஆலோசனை கூற ஒரு பெரிய குழுவை அனுப்பிவைத்து உள்ளது. மேலும் குர்தீஷ் படையினருக்கு ஆயுதங்களையும் வழங்கி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.தீவிரவாதிகள் சிஞ்சார் ந்கரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொசோ கிராமத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை புகுந்தனர்.அங்கிருந்த யாஷிதி மக்களிடம் இஸ்லாம் மதத்திற்கு மாறுங்கள் அல்லது மரணமடையுங்கள் என கூறியதாக வாஷிங்டனை இருப்பிடமாக கொண்ட யாஷிதி ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
கிராமத்தில் உள்ள 80 க்கும் மேற்பட்ட ஆண்களை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்தபெண்களையும் சிறுமிகளையும் டேல் ஆபர் என்ற நகரத்திற்கு கொண்டு சென்று உள்ளதாக யாஷிதி ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சன்னி அன்பர் மாகணத்தில் உள்ள பகுதிகள் ஐஎ.ஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்து உள்ளது.
மோசூல் நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோசூல் அணை 2 வாரங்களூக்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.நாட்டில் உள்ள அணைகளில் இது மிகப்பெரிய அணையாகும் இதை மீட்பதற்காக அமெரிக்க அதிகாரிகளுடன் இனைந்து குர்தீஷ் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.இன்று காலை அணையை சுற்றி முகாமிட்டு இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான் வழி தாக்குதல் நடைபெற்றதாக குர்தீஷ் மீடியா தெரிவித்து உள்ளது.
ஈராக்கில் மதம் மாற மறுத்த 80 பேர் சுட்டுக் கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்
ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பல நகரங்களை சன்னி பிரிவு ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். தற்போது குர்தீஷ்தானிலும் பல இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
அங்கு மைனாரிட்டியாக வாழும் ‘யாஷிடி’ என்ற பூர்வீக குடிமக்களையும், கிறிஸ்தவர்களையும் இஸ்லாம் மதத்துக்கு மாறுங்கள், இல்லா விட்டால் கொன்று விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.
இதனால் அஞ்சும் அவர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் சிஞ்சார் மலையில் பதுங்கி உள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் தண்ணீர் மற்றும் உணவு வழங்கி வருகிறது. இன்னும் பலர் ஊர்களில் தங்கியுள்ளனர்.
சிஞ்சார் அருகே ‘கோசோ’ என்ற இடத்தில் ’யாஷிடி’ இன பூர்விக குடிமக்கள் உள்ளனர். அங்கு புகுந்த தீவிரவாதிகள் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினர்.
அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர். இஸ்லாம் மதத்துக்கு மாறும் படி 5 நாட்களாக சொற்பொழிவு நிகழ்த்தினர். அதன் பிறகும் அவர்கள் மதம் மாற மறுத்து விட்டனர்.
அதன் பின்னர் கோசோ கிராமத்தில் ஒரு பள்ளிக்கு அவர்களை அழைத்து சென்று ஆண்கள் 80 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
மேலும், ‘யாஷிடி’ இன பெண்கள் மற்றும் குழந்தைகளை தல்அபிள் நகருக்கு கடத்தி சென்று விட்டனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.