
நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியீடு
நிலவின் மேற்பரப்பில் வேற்று கிரகவாசி ஒருவன் நடந்து செல்வதை தான் பார்த்ததாக யூ டியூப் பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது ஒரு மாதத்தில் குறைந்தது 20 லட்சம் முறை நடந்துள்ளது என்றும் வீடியோ படத்தில் பதிவாகி உள்ள நிழல் போன்ற உருவம் வேற்று கிரகவாசியாக இருக்க கூடும் என்றும் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உளவியல் சார்ந்த விசயம்
எனினும், இது உளவியல் சார்ந்த விசயம் என்றும் பிரபலமான பொருட்களுடன் நாம் பார்ப்பவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்ற வழக்கம் பாரெய்டோலியா என அழைக்கப்படுகிறது என அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. அதாவது, ஒருவரது முகம் மற்றும் பிற முக்கியமான பொருட்களுடன் ஒத்திருப்பதாக நமது மூளை நமக்கு பதிலளிக்கிறது. ஒரு பொருள் இல்லாதபோதும், நமது கற்பனை வளத்தை அதிகப்படுத்தி அதனை அர்த்தமுள்ள ஒரு பொருளாக பார்க்கும் வழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது சுற்றப்புறத்தில் உள்ள முகங்களை சரியாக பார்ப்பதற்கும் மற்றும் கூட்டம் ஒன்றில் நமது நண்பர்களை அடையாளம் காண்பதற்கும் ஏற்ற வகையில் மனிதனின் கண்கள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டாம் ரோஸ் என்பவர் கூறும்போது, இந்த உருவம், கடந்த 226 பி.சி. (கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு) ஆண்டில் இருந்த தி கொலஸ்சஸ் ஆப் ரோட்ஸ் சிலையை ஒத்து இருக்கிறது என்றார். இந்த சிலை பலத்த நிலநடுக்கத்தில் உடைந்து கீழே விழுந்து விட்டது. இந்த உருவம் குறித்த ஆராய்ச்சியில் வாவ்பர்ரீல் என்பவர் ஈடுபட்டார்.
வேற்று கிரக விண்கலம்
நிழல் போன்ற உருவம் குறித்த ஆய்வின்போது, இணையதள பயன்பாட்டாளர்களில் ஒருவரான ஜேசன்கோ என்பவர் கொடுத்த தகவல் பயனுள்ளதாக அவருக்கு இருந்துள்ளது. கூகுள் நிலவில் இந்த உருவம் ஒழுங்கற்ற வடிவத்துடன் கருப்பு நிறத்தில் இருந்துள்ளது.
இது மிக பெரிய உருவம் கொண்ட நிற்கும் நிலையிலான பொருளின் நிழல் ஆக இருக்கும் என அவர் கருதியுள்ளார். முதலில், படத்திற்குள் ஏதோ ஒரு உருவத்தை வரைந்து வைத்திருப்பார்கள் என நான் கருதினேன். ஆனால், கூகுள் நிலவிற்குள் சென்று பார்த்தபொழுது தான் உருவம் இருப்பதை உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று வாவ்பர்ரீல் கூறுவது முதன்முறையல்ல. கடந்த ஜனவரியில், நிலவில் ரகசியமாக வேற்று கிரகவாசிகளின் தளம் அல்லது விண்கலம் இருப்பதாக தான் நம்புவதாக புகைப்படங்களை ஆதாரமாக காட்டினார். இவரது கூற்றின்படி, கூகுளில் உள்ள நிலவு வரைபடத்தில் முக்கோண வடிவத்தில் உருவம் ஒன்று தெரிந்துள்ளது. அதன் முனையில் 7 ஒளி நிறைந்த புள்ளிகள் காணப்பட்டுள்ளன. அது பெரிய பள்ளமா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர், அது உண்மையில் இருக்கிறது. போலியானது அல்ல. அது என்னவாக இருக்கும் என்பது குறித்த விவரம் என்னிடம் இல்லை. மற்ற பள்ளங்களில் இது போன்ற எதனையும் நான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
விண்கலத்தின் முனை
ஆனால், டெக் மற்றும் கெஜட் நியூஸ் என்ற இணையதளம் இதனை வேறு விதமாக கூறுகிறது. அதன் இணையதள பக்கத்தில், மிக பெரிய உருவமானது மூழ்கி போன முக்கோண வடிவ விண்கலத்தின் முனையாக இருக்க கூடும். ஆனால் பூமியில் உள்ள விமானத்தை விட அளவில் பெரியதொன்றாக அது இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
எனினும், செவ்வாய் கிரகத்தில் இகுவானா எனப்படும் ஒரு வகை பல்லி ஒன்றின் படிவம் இருப்பதாக கடந்த ஜனவரியில் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோன்று, ஜெர்மன் விண்வெளி மையத்தின் இணையதளம் ஒன்றில் ரொசட்டா என்ற வால் நட்சத்திரத்தில் மனித முகம் தெரிவதாக புகைப்பட ஆதாரத்துடன் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

நியூயார்க்: நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சியால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை.ஒரு மனிதனின் உருவத்தைப் போலவே அது தெரிகிறது. அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாகத் தெரிகிறது.இந்தப் படம் அடங்கிய வீடியோ தற்போது யூடியூபில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.