ஜப்பானில் ஹலாங் புயல் தாக்கியதில் நிலச்சரிவு: 10 பேர் பலி 700 விமானங்களின் பயணம் ரத்து
11 Aug,2014


ஜப்பான் நாட்டில் ஹலாங் புயல் தாக்கியதில் அங்கு பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. கடும் மழை காரணமாக அந்நாட்டின் மிகப்பெரிய தீவான ஹோன்சு தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜப்பானில் புத்த வார விழா கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில், அந்நாட்டில் நிலத்தையும், வான் போக்குவரத்தையும் சீர்குலைக்கும் வகையில் ஹலாங் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. வடக்கு ஜப்பானில் மிக கனத்த மழை பெய்து வருவதால் அப்பகுதியில் நிலச்சரிவும், வெள்ள அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்போது பலவீனமடைந்துள்ள இந்த சூறாவளி புயல் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி திரும்பியுள்ளது. இப்புயல் காரணமாக அந்நாட்டில் 700 விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது