தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உத்தர -வுகாசா மீது இஸ்ரேல் தாக்குதல்
08 Aug,2014

காஸா தாக்குதலை தொடங்கியதை அடுத்து பழிக்குப்பழி வாங்க தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேல் – காஸாமுனை இடையே கடந்த மாதம் 8–ந் தேதி தொடங்கிய சண்டை உக்கிரம் அடைந்தது. இந்த சண்டையில் இதுவரையில் 1,834 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இஸ்ரேலும் 64 வீரர்களையும், பொதுமக்களில் 3 பேரையும் இழந்தது. கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது உலகமெங்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பலத்த குரல் எழுந்தது. இந்த நிலையில், இரு தரப்பினரிடையே 5ம் தேதி காலை உள்ளூர் நேரப்படி 8 மணிக்கும், இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கும் 3 நாள் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து காஸா முனை சண்டையில் ஈடுபட்டு வந்த தனது படைகள் அனைத்தையும் வாபஸ் ஆகும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது.

புதிய சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினரும் கெய்ரோவில் நடக்கிற சமாதானப் பேச்சு வார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்றிருந்தது. பாலஸ்தீனத்தைப் பொருத்தமட்டில், காஸாமுனையில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் நிபந்தனையாக இருந்தது. இரு தரப்பினரிடையே நிரந்தர சண்டை நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் தீவிரமாக நடைபெற்றது. இதற்கிடையே காஸா முனையில் இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று பாலஸ்தீனம் தெரிவித்தது. போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாலஸ்தீனம் வலியுறுத்தியது.
3 நாள் சண்டை நிறுத்தம் முடிந்ததை அடுத்து இன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசியுள்ளனர். போர் நிறுத்தம் செய்ய சமாதான நிலைக்கு வந்த இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் மீண்டும் தாக்குதலை நடத்தியது மீண்டும் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஸா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ மந்திரியும் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். காஸாமுனை பகுதியில் இஸ்ரேல் படையினர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் முயற்சி செய்தும் மீண்டும் இரு தரப்பினரும் அடித்துக் கொள்வது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட இஸ்ரேல், 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. இன்றுடன் அதற்கான கெடு முடிவடையும் நிலையில், போர் நிறுத்தத்தை தொடர எகிப்து கேட்டுக் கொண்டது. இந்நிலையில், இருதரப்பும் மீண்டும் சண்டை போட துவங்கி உள்ளன.