உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 3 பேர் பலி
26 Apr,2026
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி தொடங்கிய போர் நான்காண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது.
அங்குள்ள டினிப்ரோ நகரின் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோல் பிற நகரங்கள் மீதும் விடிய, விடிய டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.