அமெரிக்க தூதரகம் சூறை துப்பாக்கிசூட்டில் 10 பேர் பலி: பாகிஸ்தானில் பயங்கரம்
02 Mar,2026
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கராச்சி நகரில் நேற்று நூற்றுக்கணக்கான ஈரான் ஆதரவாளர்கள் அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூதரகத்தின் பிரதான வாயிலைக் கடந்து கூட்டமாகச் சென்ற இளைஞர்கள் வளாகத்துக்குள் நுழைந்து கட்டிடத்திற்குள் இருந்த பொருட்களை சூறையாடினர்.
ஆர்பாட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். சிந்து மாகாண மருத்துவமனையின் டாக்டர் சுமையா சையத் கூறுகையில், மருத்துவமனைக்கு 10 உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.