இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானில் 31 பேர் உயிரிழப்பு!!
02 Mar,2026
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகரின் புறநகர் பகுதிகளில் 20 பேர் பலி; 91 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு லெபனான் பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 58 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதையடுத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.