2 நாட்களில் 140+ பேராளிகளை சுட்டு கொன்ற ராணுவம்..

02 Feb,2026
 

 
 
 இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது பலுசிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தில் இருக்கிறது. அங்கு பலூச் போராளிகள், பாகிஸ்தான் பாதுகாப்புப் படை என இரு தரப்புமே தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுமார் 40 மணி நேரம் நீடித்த மோதலில் பாகிஸ்தானில் சுமார் 145 பலூச் போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானுக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் தலைவலியைக் கொடுத்து வந்தது பலூச் போராளிகள். அதாவது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என இவர்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இவர்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து வன்முறையைப் பயன்படுத்தி வருகிறது.
 
 தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பலூச் போராளிகள் பாகிஸ்தான் ராணுவத்தைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களையும் நடத்துவார்கள். அப்படித் தான் சமீபத்தில் பாகிஸ்தானில் பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். 
 
இதற்கிடையே பலுசிஸ்தான் போராளிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் இறங்கியுள்ளது. பலுசிஸ்தானில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பல பலூச் போராளிகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர். 40 மணிநேரம் நீடித்த இந்தக் கொடூரச் சண்டையில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள இந்தத் தென்மேற்கு மாகாணம், பல ஆண்டுகளாக இல்லாத மிகக்கொடூரமான வன்முறையை எதிர்கொண்டது. இங்குக் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
 
கடந்த சனிக்கிழமை பலூச் உறுப்பினர்கள் பொதுமக்களைப் போலவே வேடமிட்டு மருத்துவமனைகள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் சந்தைகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் தலால் சவுத்ரி, "கண்மூடித்தனமாகச் சாதாரண மக்களைத் தாக்கிவிட்டு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயங்கரவாதிகள் பயன்படுத்தினர்" என்றார். 
 
பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. அதேநேரம் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தனர். மாகாணம் முழுவதும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து 'ஹீரோஃப்' அல்லது 'கருப்புப் புயல்' என்ற பெயரில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் அறிவித்தனர். பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி அளித்த தகவலின்படி,
 
 தாக்குதல்களில் 17 சட்ட அமலாக்கப் படையினரும், 31 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் தான் பலூச் போராளிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் மெகா ஆபரேஷனை ஆரம்பித்தது. பலூசிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கும் இந்த ஆபரேஷன் சுமார் 40 மணி நேரம் நீடித்துள்ளது. அதில் தான் சுமார் 145 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies