அமெரிக்காவில் பனிப்புயல் - சுமார் 25 பேர் உயிரிழப்பு
27 Jan,2026
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் பனிப்புயல் பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து பகுதி வரை சுமார் 2,100 கிலோமீட்டர் பரப்பளவுக்கு சுமார் 1 அடி உயரத்துக்கு பனி சூழ்ந்துள்ளது. இதனால் சாலை மற்றும் வான் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த பகுதியில் மின் வசதியின்றி கடும்குளிரான சூழலில் மக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பனிப்பொழிவால் மின் கம்பங்கள் மற்றும் மின்சாரத்தை கடத்தும் கம்பிகள் சேதமடைந்துள்ளதாக மின்தடை குறித்து தகவல் அளிக்கும் poweroutage.com தெரிவித்துள்ளது.
பனிப்புயல் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் சுமார் 8 பேர் வீட்டை விட்டு வெளியில் வந்திருந்த போது உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.