சுரங்கத்துக்குள் பதுங்கிய ஈரான் தலைவர் கமேனி.. தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா?
25 Jan,2026
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பல்கள், போர் விமானங்களை நிலை நிறுத்தி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்கி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ போராட்டத்தை அரசு முடக்ககூடாது. போராட்டக்காரர்களை தூக்கில் போடக்கூடாது. மீறினால் அமெரிக்கா தலையீடு செய்யும். ஈரானை தாக்கவும் தயங்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும் அமெரிக்கா, எப்போது வேண்டுமானாலும் ஈரானை தாக்கலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு ஏற்ப அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றுமு் போர் விமானங்களை ஈரானை சுற்றிய இடங்களில் நிலை நிறுத்தி உள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ராணுவ, விமானப்படை தளங்களில் வான்வெளி பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கான அமைப்புகளை அமெரிக்கா பலப்படுத்தி உள்ளது.
பதற்றம் இதனால் ஈரான் நடுங்கி உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்து உஷாராகி உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா தாக்கினால் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைத்து தாக்கலாம் என்று அந்த நாட்டின் உளவுத்துறை கணித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்கி உள்ளார்.
அயதுல்லா அலி கமேனி தற்போது பதுங்கி உள்ள சுரங்கம் ஈரானில் பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பான சுரங்கங்கங்களில் மிகவும் முக்கியமானது. இந்த சுரங்கம் எத்தகைய தாக்குதலையும் தாங்கும் திறனும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேற பூமிக்கடியில் பல வழிப்பாதைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
அயதுல்லா அலி கமேனி தற்போது பதுங்கி உள்ள சுரங்கம் ஈரானில் பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பான சுரங்கங்கங்களில் மிகவும் முக்கியமானது. இந்த சுரங்கம் எத்தகைய தாக்குதலையும் தாங்கும் திறனும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேற பூமிக்கடியில் பல வழிப்பாதைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் அவரது 3வது மகன் மசூத் அமர்ந்து முக்கிய நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறார். ஈரான் அதிகாரிகள் மசூத்தை தான் தொடர்பு கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் எதிர்க்கட்சி ஆதரவு சேனலில் வெளியான செய்தியை மையப்படுத்தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
பதிலடிக்கு தயாரான கமேனி அமெரிக்காவுக்கு பயந்து ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இஸ்ரேல் ஈரானை தாக்கிய பிறகு அந்த நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர் விமானங்கள் ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசி சென்றது. இந்த சமயத்தில் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.