குவாத்தமாலாவில் பேருந்து விபத்து: குறைந்தது 15 பேர் பலி
27 Dec,2025
மேற்கு குவாத்தமாலாவில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 19 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடர்ந்த மூடுபனி
இந்த விபத்தில் 11 ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 19 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடர்ந்த மூடுபனியால் வாகன ஓட்டுநர்களின் பார்வை குறையும் பகுதியாக அறியப்படும் இடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.