பள்ளி மீது டிரோன் தாக்குதல் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி
07 Dec,2025
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவு படையானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு சூடானில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி மீது வியாழனன்று துணை ராணுவத்தின் விரைவு ஆதரவுப்படையானது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் 33 பேர் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட 2வது எதிர்பாராத தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. அந்த பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் முழுவிவரங்கள் உடனடியாக தெரியவில்லை.