தெற்கு தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்புகள் 145 ஆக உயர்வு
29 Nov,2025
தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோங்க்லா மாகாணத்தில் மட்டும் 110 பேர் உயிரிழந்துள்ளதுடன் மலேசியா எல்லைக்கு அருகிலுள்ள ஹாட் யாய் மாவட்டம் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளநீர் குறைவதைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியதுடன், வீதிகள் குடியிருப்பு பகுதிகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழை குறைந்துள்ளதென அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தாலும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை தொடரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , பொதுமக்களின் பல உடைமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.