இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி
29 Nov,2025
இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் இந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 79 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட சுமத்திராவில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 42 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஆசே மாகாணத்தில் 35 பேரும், மேற்கு சுமாத்திராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை நீர் நிறைந்துள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன. படாங்க் டோறு நகரில் அடையாளம் காணப்படாத உயிரிழந்தோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் வீதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு வானூர்தி மூலம் உதவி மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.