நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 42 பேர் உயிரிழப்பு
05 Oct,2025
நேபாளத்தில், வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோஷி மாகாணத்தில் இலாம் மாவட்டத்தில் சுமார் 37 பேர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
11 பேர் காணமல் போயுள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளை, கடும்மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது