புவலாய் சூறாவளி ; பிலிப்பைன்ஸில் 20 பேர் பலி ; வியட்நாமில் 12 மீனவர்கள் மாயம்
29 Sep,2025
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் சூறாவளி தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளனர். 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூறாவளியால், மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வியட்நாம் நோக்கி சூறாவளி நகர்ந்து உள்ளது. அதன் தாக்கம் கடுமையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை அதிகாலை வடக்கு மத்திய வியட்நாமில் புவாலோய் புயல் கரையைக் கடந்துள்ளது. வீடுகளை சேதப்படுத்தியது மற்றும் மின் கட்டமைப்புகளை சேதப்படுத்தியுள்ளது. சூறாவளி வெள்ளப்பெருக்கு மழை மற்றும் பாரிய அலை எழுச்சி ஆகியவற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 12 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சூறாவளியால் பலத்த காற்று சில மணி நேரங்களுக்கு முன்பு கரையைக் கடக்கும்போது 117 கி.மீ. வேகத்தில் இருந்து மணிக்கு 88 கிமீ (55 மைல்) ஆகக் குறைந்துள்ளது.