தைவான், ஹாங்காங்கை பந்தாடிய சூப்பர் புயல் ‘ரகாசா'.. கடுமையான பாதிப்பபு
28 Sep,2025
சூப்பர் புயலாக (Super typhoon) உருவெடுத்துள ரகாசா புயல் பிலிப்பைன்சை தொடர்ந்து தைவானை உலுக்கியது. தைவானில் கடும் சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது. 14 பேர் புயலின் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ரகாசா புயல் சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளை ரகாசா புயல் தாக்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகத் தீவிரமான புயலாக ரகாசா உருவெடுத்துள்ளது. அதி தீவிர புயலாக உருவெடுத்த இந்த புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. புயலின் பாதிப்பால் இடைவிடாது மழை கொட்டியது. இதனால் ஹாங்காங்கில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
தடுப்பணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தைவானிலும் நிலைமை மோசமாக இருந்தது. ஹுலைன் மாகாணத்தில் கனமழை பெய்ததால் அங்குள்ள தடுப்பணைகள் உடைந்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 124 பேரைக் காணவில்லை.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ரகாசா புயல் முதன் முதலாக தாக்கிய பிலிப்பைன்சிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 22 ஆம் தேதி பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த புயலின் போது மணிக்கு 215 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இடையிடையே 265 கி.மீ வேகம் வரை காற்றின் வேகம் இருந்தது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இயல்பு வாழ்க்கை முடங்கியது அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த புயல் சீனாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் குவாங்க்டோங் கடலோர பகுதியான தைஷான் மற்றும் ஜான்ஜியாங் இடையே கரையை கடக்க உள்ளது.
இந்திய டெக்கிகளுக்கு சீனா வலை! சீன் மாறுதே!" இந்த புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் 10 க்கும் மேற்பட்ட மாகாணங்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.