ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400 ஆக
02 Sep,2025
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கங்களால் குனார் மாகாணத்தில் 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்ததாக தாலிபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் 3,200க்கும் மேற்பட்டோர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.