சீனாவில் கனமழை, வௌ்ளம்:10 பேர் பலி
10 Aug,2025
வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கவுன்டி உள்ளிட்ட பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லான்சோ நகருக்கருகிலுள்ள மலைப்பகுதிகளில் திடீர் வௌ்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜில்லாங் மலைப்பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை, வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர். 33 பேர் மாயமாகி உள்ளனர். வௌ்ளத்தில் சிக்கி தவிப்போரை மீட்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.