முடிவுக்கு வந்தது போர் : தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்
29 Jul,2025
எல்லை பிரச்னை தொடர்பாக தாய்லாந்து - கம்போடிய பிரதமர்கள் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மலேசியப் பிரதமரும், ஆசியான் தலைவருமான அன்வார் இப்ராஹிம் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
கம்போடியா-தாய்லாந்து நாடுகள் இடையே போர் மூண்டது. நீண்ட காலமாக இருந்த எல்லை பிரச்னை மோதலாக வெடித்ததால் பதற்றமான சூழல் உருவானது. இதில் இருதரப்பையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோர் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.
இதையடுத்து இருநாடுகளும் அவர்களது தூதர்களை திரும்பப்பெற்றுக்கொண்டன. இந்நிலையில் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் (Phumtham Wechayachai) மற்றும் கம்போடிய பிரதமர் ஹூன் மானெட் (Hun Manet) இருவரும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
...
அப்போது இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போரை முடிவுக்கு கொண்டு வருவதாக இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.