காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர்.
கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்களில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள டெய்னாவில் கொல்லப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகம் காரணமாக கொல்லப்பட்டனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவவட்டாரங்கள் இஸ்ரேலின் ஹெராட்ஸ் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களில் அதிகளவானவர்கள் சிறுவர்கள் பதின்மவயதினர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
25 பேரின் உடல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கான் யூனிசின் நாசர் மருத்துவமனை காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு குறுகிய நேரத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் அடெல் அவ் ஹெளட் உயிரிழப்புகள் அதிகமாகலாம் என தெரிவித்துள்ளார்.
போதியளவு உபகரணங்கள் மருத்துவ பணியாளர்கள் மருந்துகள் இல்லாததால் எங்களால் போதிய சிகிச்சையை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள இஸ்ரேல் அமெரிக்க காசா மனிதாபிமான பவுண்டேசன் தனது பகுதிகளிற்கு அருகில் துப்பாக்கி சூடு இடம்பெறவில்லை தன்னுடைய உணவு விநியோக தளங்களில் இருந்து வெகுதொலைவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை தங்களின் எச்சரிக்கையை மீறி சந்தேகநபர்கள் படையினரை நோக்கி வந்தவேளை எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
நான் உணவுவிநியோக மையத்தை நோக்கி பலருடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை - அனேகமாக இள வயதினர் -இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என மஹ்மூட் மொக்கெய்மார் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.
இது ஒரு படுகொலை ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் எங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் நான் ஒருவாறு உயிர் தப்பினேன் ஆனால் மூன்று உடல்களை பார்த்தேன் காயமடைந்திருந்த பலரையும் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து தாக்குதல்கள் இடம்பெற்றது அவர்கள் எங்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் உயிரிழந்த பலரை பார்த்தேன் என அவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்
அந்த பகுதியிலிருந்து தப்பியோடியவேளை உயிரிழந்த நிலையில் பலரை கண்டதாக 55 சனா ல் ஜபேரி தெரிவித்துள்ளார்.'
நாங்கள் உணவு உணவு என சத்திமிட்டோம் ஆனால்அவர்கள் எங்களுடன் பேசாமல் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எங்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் நாங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தோம் டாங்கிகள் ஜீப்புகளில் எங்களை நோக்கி வந்த இஸ்ரேலிய படையினர் அதிலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என 24 வயது டமெர் அபு அக்பர் தெரிவித்துள்ளார்.