லண்டனில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!
14 Jul,2025
லண்டனில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான விமானம் பீச் பி200 சூப்பர் கிங் ஏர், இரட்டை எஞ்சின் கொண்ட டர்போபிராப் ஜெட் விமானம் ஆகும். நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் 39 அடி உயரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது.
இதனால் வானத்தில் கரும்புகை கிளம்பியது. விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான நிபுணர்கள் விவரங்களை ஆய்வு செய்துள்ளனர். விமான விபத்தைத் தொடர்ந்து லண்டன் விமானநிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கிய நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தின் அகமதாபாத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது லண்டனில் ஏற்பட்ட விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.