காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் 4 குழந்தைகள் உள்பட 52 பேர் பலி
13 Jul,2025
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 4 குழந்தைகள் உள்பட 52 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் காசா போர் இரண்டாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடித்து வருகிறது. நேற்று காசாவின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
டெய்ர் அல் பலாஹ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 37 பேர் பலியாகினர். இதேபோல், தெற்கு காசாவின் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் ெமாத்தம் 52 பேர் பலியாகினர். ஹமாஸ் படையினரின் 250க்கும் மேற்பட்ட இலக்குகளை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.