செங்கடலில் ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் மூழ்கி 4 ஊழியர்கள் பலி
11 Jul,2025
செங்கடலில் எடர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் இஸ்ரேலில் உள்ள எய்லத் துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவி ஹவுதி போராளிகள் தாக்கியுள்ளனர். இதில் கப்பல் மூழ்கியதில் அதில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேர் பலியாகினர். கப்பலில் மொத்தம் 25 ஊழியர்கள் இருந்தனர். அதில் இந்தியர் உட்பட 10 பேர் ஹவுதிகளால் மீட்கப்பட்டுள்ளனர். கப்பல் ஊழியர்களை ஹவுதிகள் கடத்தி வைத்துள்ள இடம் தெரியவில்லை. இதனிடையே கடத்தப்பட்ட கப்பல் ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என ஹவுதிகளுக்கு அமெரிக்க துாதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.