84 உடல்கள் மீட்பு டெக்சாஸ் வௌ்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு
09 Jul,2025
அமெரிக்காவின் தென்மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் உள்ள கெர்கவுன்டியில் பெய்த தொடர் கனமழையால் குவாடலூப் ஆறு முழுவதும் நிரம்பி வௌ்ள நீர் வௌியேறுவதால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பகுதிகள் வௌ்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் குவாடலூப் ஆற்றை ஒட்டிய இடத்தில் கோடைக்கால முகாமில் 700க்கும் மேற்பட்ட
பெண்கள் தங்கி இருந்தனர். அவர்கள் வௌ்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர் னர். இந்நிலையில் நேற்று 24 குழந்தைகள் உள்பட 84 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையும் சேர்த்து டெக்சாஸ் மழை, வௌ்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.