சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து 11 தொழிலாளர்கள் பலி
30 Jun,2025
கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 பேர் பலி
இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம்(28) ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததுள்ளது.
இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.