போர்நிறுத்ததை தூக்கியெறிந்தது ஈரான்: மீண்டும் களமிறங்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படை
24 Jun,2025
புதிய இணைப்பு
ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு எதிராக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள அரசு இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் மூலம் பதிலளிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட பிறகும் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலைத் தடுக்க செயல்படுகின்றன" என்றும், மக்கள் தங்குமிடங்களுக்குள் சென்று மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அது கூறுகிறது.
இந்த நிலையில், ஈரான் குறித்த ஏவுகணைத் தாக்குதல் மூலம் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) போர்நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் (Iran) இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சேவை பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் அவசர சேவை அதிகாரி மேகன் டேவிட் அடோம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் "தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கடும் புகை எழுதுவதாகவும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.