இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான்
24 Jun,2025
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என ட்ரூத் சோஷியலில் டிரம்ப் கூறியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் உள்ள 3 அணுஆராய்ச்சி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது.
டிரம்ப் கூறியதை மறுத்து போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என ஈரான் அறிவித்தது. தற்போது வரை இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்க விமான படை தளமான அல்-உதெய்த் தளத்தை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவிய 10 ஏவுகணைகளில் 7 முறியடிக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. தங்கள் மீது அமெரிக்கா நடத்திய அதே எண்ணிக்கையில் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் அறிவித்தது. தங்களின் தாக்குதலில் நட்பு நாடான கத்தாருக்கோ, அதன் மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. கத்தார் மட்டுமின்றி சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் அளித்துள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேல், ஈரான் போரின் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. தாய்லாந்து நாட்டில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் தரையிறங்கியது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மறு உத்தரவு வரும் வரை தங்களது விமான சேவையை ரத்து செய்தது.
பின்னர் கத்தார் நாட்டில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதால் விமான சேவையை கத்தார் ஏர்லைன்ஸ் தொடங்கியது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் வான்வெளி மூடப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தங்களது பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதகாக கத்தார் ஏர்லைன்ஸ் தகவல் அளித்தது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது.