தோஹாவின் உடனே ஆக்டிவேட் ஆன பாதுகாப்பு மண்டலம்.... அமெரிக்கா
23 Jun,2025
கத்தாரில் உள்ள அமெரிக்கப் படைகளை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை ஏவியது. இதை கண்ட உஷாரான அமெரிக்காவின் விமானப்படை உடனடியாக, அமெரிக்க பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை தோஹாவின் வான் எல்லையில் ஆக்டிவேட் செய்தது. வானிலையே ஈரான் ஏவிய ஏவுணைகளை தடுத்து அழித்தது. எத்தனை ஏவுகணைகள் வானிலையே அழிக்கப்பட்டன என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் குதித்த அமெரிக்கா,
கடந்த 22ம் தேதி அதிகாலையில் ஈரான் நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசின.இதில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ஈரானின் அணு உலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதற்கு பதிலடி நிச்சயம் கொடுப்போம் என்று ஈரான் அறிவித்திருந்தது.
அதன்படியே மத்திய வளைகுடாவில் உள்ள முக்கியமான நாடான கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமான படையின் தளமான அல்-உதெய்த் தளத்தை குறிவைத்து ஈரான் திங்கள் கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. Also Read நாங்கள் கத்தாரில் கை வைத்த இடம்.. அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்து.. ஈரான் அறிக்கை கத்தார் தலைநகர் தோஹாவில் 24 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அல்-உதெய்த் தள விமான தளத்தில் சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்று வருகிறார்கள். இங்கு ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமம் ஆகும். அதாவது 6 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியது.
. 10,000 வீரர்கள் உள்ள இடத்தை தாக்கிய ஈரான் திடீரென்று எல்லாம் ஈரான் வீசவில்லை. வீசப்போகிறோம் என்பதை முறைப்படி அமெரிக்காவிற்கு தெரிவித்துவிட்டே வீசியது.இதனால் உஷார் நிலையில் இருந்த கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்டை, பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை தோஹாவின் வான் எல்லையில் ஆக்டிவேட் செய்தது. இந்த தாக்குல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், இந்த நடவடிக்கை நமது நட்பு மற்றும் சகோதர நாடான கத்தார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. வானிலையே ஈரான் ஏவிய ஏவுணைகளை தடுத்து அழித்தது.
எத்தனை ஏவுகணைகள் வானிலையே அழிக்கப்பட்டன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.மேலும் ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தெரியவரவில்லை. இந்நிலையயில் ஈரான் ஏவுகணைகள் வருவது குறித்தும்,அதனை அமெரிக்க விமானப்படை நடுவழியில் தடுத்து அழிப்பதுமாக வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.