மத்திய கிழக்கில்கத்தாரில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது
23 Jun,2025
தங்கள் நாட்டின் அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியதையடுத்து, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்.
முதல் கட்டமாக 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியிருக்கிறது. மேற்காசியாவின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளம், கத்தாரில்தான் உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் மீது 10 ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. ஈரான் இந்த தாக்குதலுக்கு, ஆபரேஷன் பராக்கத் அல்-ஃபத்தாஹ் என பெயரிட்டிருக்கிறது. இதில் பராக்கத் என்றால் ஆசிர்வாதம் என்று பொருள். அல்-ஃபத்தாஹ் என்றால் வெற்றி பெறுபவர் என்று அர்த்தம். இது இஸ்லாத்தில் அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றாகும். மொத்தமாக சேர்த்து படித்தால் 'வெற்றியின் ஆசீர்வாதம்' என்று பொருள் வருகிறது.
ஈரான் தாங்கள் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ராணுவத்தளம் குறித்தான 3D காணொளியை வெளியிட்டுள்ளன. இந்த வீடியோவில், "இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் பல அயோக்கியத்தனமான தாக்குதல்கள் இங்கிருந்துதான் துவங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளன.