பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை - நிலை தடுமாறிய தலைநகர்
22 Jun,2025
அமெரிக்காவின் (United States) தாக்குதலுக்கு பழிவாங்க, இஸ்ரேல் (Israel) தலைநகர் டெல் அவிவ் (Tel Aviv-Yafo) மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை ஈரான் (Iran) தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானின் இந்த தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணை தாக்குதல் தொடர்வதற்கு முன்னர் இஸ்ரேலில் உள்ள சைரன் ஒலிக்கும். ஆனால், சைரன் ஒலிப்பதற்கு முன்னரே இந்த முறை தாக்குதல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதல் கட்ட ஏவுகணை தாக்குதலை முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கியிருப்பதாகவும் ஈரானிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று அதிகாலை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி மையங்களின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது.
தாக்குதலில் அனைத்து அணுசக்தி மையங்களும் அழிக்கப்பட்டுவிட்டது என்று ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், தாக்குதல் வெற்றிபெறவில்லை என்று ஈரான் கூறியிருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.