உலகின் மிக சிறந்த உளவு அமைப்புகளில் முக்கியமானது மொசாட். இவர்கள் உலகெங்கும் மிக சீக்ரெட்டான ஆபரேஷன்கள் பலவற்றை சத்தமே இல்லாமல் நடத்தியுள்ளனர். அப்படி தான் ஈரானில் இரவோடு இரவாக இறங்கிய மொசாட் குழு மிக பெரிய ஒரு சீக்ரெட் ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
இதில் ஈரானைக் காட்டிலும் இஸ்ரேல் கை ஓங்கி இருக்க முக்கிய காரணமே அதன் உளவு அமைப்பான மொசாட் தரும் உளவுத் தகவல்கள் தான். உலக நாடுகளையே அலறவிடும் அளவுக்கு மொசாட் பல சீக்ரெட் ஆபரேஷன்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதில் ஒன்று குறித்து நாம் பார்க்கலாம்.
இரவோடு இரவாக இறங்கிய மொசாட் டீம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி இரவு இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளின் டீம் ஒன்று தெற்கு தெஹ்ரானில் உள்ள ஆலையில் நுழைந்தனர். அந்த ஆலை பார்க்க மிகச் சாதாரணமாகவே இருந்தது. ஈரானுக்குள் இஸ்ரேல் உளவாளிகள் நுழைவது கிட்டதட்ட முடியாத காரியம். ஈரானின் அவ்வளவு பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி நுழைந்த இந்த மொசாட் டீம் ஏன் இந்த சாதாரண ஆலைக்குள் நுழைந்தது என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
உண்மையில் அந்த ஆலையில் தான் ஈரான் அணு ஆயுத சோதனை குறித்த முக்கிய டேட்டாக்களை சேகரித்து வைத்திருந்தது. இதன் காரணமாகவே மொசாட் உளவாளிகள் அந்த ஆலையைக் குறிவைத்தனர். ஓராண்டாக உளவு பார்த்ததில் இரவு ஷிப்ட் செக்யூரிட்டி கிளம்பிய பிறகு, மார்னிங் ஷிப்ட் செக் செக்யூரிட்டி ஆலைக்கு வர சுமார் 6.29 மணி நேரம் அவகாசம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதன் காரணமாகவே அவர்கள் இரவோடு இரவாக அந்த ஆலையில் நுழைந்தனர்.
ஆணு ஆயுதங்கள் ஈரான் நீண்ட காலமாக அணு ஆயுத சோதனை எதையும் செய்யவில்லை எனக் கூறி வந்த நிலையில், அது பொய் என்பதை ஆதாரத்துடன் காட்டவே இந்த சீக்ரெட் ஆபரேஷனை செய்தனர். இந்த ஆபரேஷனில் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான 50,000 பக்கங்கள் மற்றும் வரைபடங்கள், போட்டோக்கள் உட்பட 163 சிடிக்களை அவர்கள் திருடிச் சென்றனர். மேலும், அங்கிருந்த 32 பாதுகாப்பு பெட்டகங்களை பர்னர் டார்ச் மூலம் உருக்கியுள்ளனர். உள்ளே இருந்த வெடிகுண்டு வடிவமைப்புகள் மற்றும் போர்க்கப்பல் குறித்த பைல்ஸ்கலை எடுத்தனர். இப்படி முக்கியம் என நினைத்த எல்லா லாக்கர்களையும் அவர்கள் எடுத்தனர்.
ஒட்டுமொத்தமாக சுமார் 500 கிலோ எடையுள்ள ஆவணங்கள், சிடிக்களை எடுத்துள்ளனர். மிக தெளிவான பிளான் இதற்காக அவர்கள் மிக விரிவான திட்டம் ஒன்றையும் போட்டிருந்தனர்.. செக்யூரிட்டி ரோந்து பாதையைக் கவனமாகக் கண்காணித்தனர். எங்கெல்லாம் அலாரம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை எந்தவொரு தடயமும் இல்லாமல் செயலிழக்க வைத்தனர். எந்தப் பாதுகாப்பு பெட்டகத்தில் முக்கியமான ஆவணங்கள் உள்ளன என்பதையும் சரியாகக் கண்டறிந்தனர். எல்லாவற்றையும் பக்காவாக திட்டம் போட்டு முடித்துள்ளனர்
இப்படியொரு சீக்ரெட் ஆபரேஷனை இஸ்ரேல் நடத்துவதே விடியும் வரை ஈரானுக்குத் தெரியவில்லை. காலை ஷிப்ட் காவலாளிகள் அங்கு வந்த பார்த்த பிறகே ஆவணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கதவுகள் உடைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டகங்கள் காலியாக இருப்பதைப் பார்த்ததும், ஈரான் உடனடியாக ஒரு பெரிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. ஆனால் அது பயனற்றதாகவே முடிந்தது. அம்பலப்படுத்திய நெதன்யாகு இந்தச் சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கையில் கருப்பு நிற போல்டர்கள் மற்றும் சிடிக்கள் உடன் அவர் கூறிய கருத்துகள் உலக அரங்கே அதிர வைத்தது. ஏனென்றால் கடந்த 2015ல் ஒபாமா அதிபராக இருந்தபோது அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் உடன் அமெரிக்கா முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயலக் கூடாது.
ஆபரேஷன் "ரைசிங் லயன்" விஷயமே வேற மேற்குலக நாடுகள் ஆனால், அதை மீறும் வகையில் ஈரான் ரகசியமாக இந்த வேலைகளைச் செய்துள்ளது. அதை அம்பலப்படுத்தும் வகையிலேயே மொசாட் இந்த மிஷனை முடித்துள்ளது. இந்த ஆவணங்களை இஸ்ரேல் வெளியிட்ட பிறகு, அதைக் காரணமாகச் சொல்லியே ஈரான் உடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இஸ்ரேல் வெளியிட்ட ஆவணங்களை மேற்குலக நாடுகள் விரிவான ஆய்வு செய்தனர். இந்த ஆவணங்கள் உண்மையானவை என்பதை ஒப்புக்கொண்ட உலக நாடுகள், அவை கவலை அளிப்பதாகவும் தெரிவித்தனர். ஈரான் அணு ஆயுதங்களில் நினைத்ததை விட மிகவும் முன்னேறியுள்ளது என்பதையும் இஸ்ரேலின் சீக்ரெட் மிஷன் தான் உலகிற்கு அம்பலப்படுத்தியது.