உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 9 மணி நேரம் தாக்குதல்: 15 பேர் பலி, 116 பேர் காயம்
18 Jun,2025
உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் சுமார் 9மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 15பேர் பலியானர்கள். 116 பேர் காயமடைந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. 440க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இரவு தொடர்ந்து சுமார் 9 மணி நேரம் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதில் 9 மாடி குடியிருப்புக்கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்த 14 பேர் பலியானார்கள். மேலும் 99 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இதேபோல் ஒடேசாவில் டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 17 பேர் காயமடைந்தனர்