"ஈரான் தலைவர் கமேனி பதுங்கியுள்ள இடம் எங்களுக்கு தெரியும்! கொல்ல மாட்டோம்.. சரணடையனும்!
17 Jun,2025
"-
இஸ்ரேல் ஈரான் என இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் உயர்மட்டத் தலைவர் கமேனி இருப்பிடம் குறித்து எங்களுக்குத் தெரியும் என்றும் ஈரான் நிபந்தனையற்ற சரணடைவதே ஒரு தீர்வு என்றும் கமேனி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த 5 நாட்களாகவே இஸ்ரேல் ஈரான் இடையே மாறி மாறி தாக்குதல் நடந்து வருகிறது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை என்ற போதிலும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவைக் கொடுத்து வருகிறது. டிரம்ப் எச்சரிக்கை இதற்கிடையே ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் உயர்மட்டத் தலைவர் கமேனி இருப்பிடம் குறித்து எங்களுக்குத் தெரியும் என்றும் ஆனால் இப்போது அவர் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருவதாகவும் ஈரான் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிபந்தனையற்ற சரணடைவதே ஒரு தீர்வு என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார். எங்களுக்குத் தெரியும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியலில் பக்கத்தில்,
"உயர்மட்ட தலைவர் என்று சொல்லப்படும் நபர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் இப்போதும் எங்களுக்கு எளிதான இலக்கு தான், ஆனால் அங்கு அவர் பாதுகாப்பாக இருக்கிறார். அவரை நாங்கள் (கொல்ல) விரும்பவில்லை.. குறைந்தது இப்போது அந்த திட்டம் இல்லை" பதிவிட்டுள்ளார். சரணடைவதே ஒரே தீர்வு மேலும் அவர், "ஆனால் பொதுமக்கள் மீதோ அல்லது அமெரிக்க வீரர்கள் மீதோ ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டால் அதை ஏற்க முடியாது.
எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல அவர் மற்றொரு போஸ்ட்டில், "நிபந்தனையற்ற மன்னிப்பே ஒரே தீர்வு!" என்று அவர் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் டிரம்ப் இப்படி எச்சரித்துள்ளார். இந்த மோதலில் வன்முறையில் ஈரானில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,
அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். மேலும் இஸ்ரேலில் குறைந்தது 24 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினரும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
எங்களுக்குத் தேவை நிரந்தர தீர்வு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் நிலைப்பாட்டு குறித்து விளக்கமளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நாங்கள் போர் நிறுத்தத்தை விடச் சிறந்த ஒன்றைப் பார்க்கிறோம்.. அதாவது உண்மையான தீர்வு. போர் நிறுத்தம் தற்காலிக தீர்வு தான்.. ஆனால், நிரந்தரம் இல்லை. நாங்கள் நிரந்தர முடிவை எதிர்பார்க்கிறோம்" என்றார். இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போதைய சூழலில் இரு நாடுகளுமே பின்வாங்கத் தயாராக இருப்பது போலத் தெரியவில்லை. இதனால் மோதல் மேலும் தொடரும் என்றே அஞ்சப்படுகிறது.