இஸ்ரேல் முழுவதும் சரமாரி தாக்குதல்கள்..! ஈரானின் பதிலடி ஆரம்பம்
13 Jun,2025
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை இதனை 'X' தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, நூற்றுக்கணக்கான பல்வேறு பெலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானின் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் IRNA குறிப்பிட்டுள்ளது.
அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் விழுந்துள்ளன.
இதனால், 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த ஐவரில் நால்வர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.