மத்திய கிழக்கில்(ஈரான்) தற்போது நடைபெற்று வரும் போருக்கு முக்கிய காரணம் அணு ஆயுதம்தான் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமிய நாடுகள் அணு ஆயுதத்தை கையில் எடுத்துவிட கூடாது என்பதற்காக, இஸ்ரேலை வைத்து அமெரிக்கா இந்த போரை தொடங்கியுள்ளது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2010 காலக்கட்டங்களில் உலகம் முழுவதும் அணு ஆயுதம் தொடர்பான அச்சம் பல மடங்கு அதிகரித்தது.
காரணம், ஈரான் அணு சக்தியை எப்படி பயன்படுத்துவது என்று பரிசோதிக்க தொடங்கியது. இந்த பரிசோதனை வெற்றியும் பெற்றது. ஒருவேளை ஆயுத தயாரிப்புக்காக அணு சக்தி பயன்படுத்தப்பட்டால், அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். எனவே இஸ்ரேலை கொம்பு சீவி, ஈரானுடன் அவ்வப்போது சின்ன சின்ன ஒரண்டையை இழுக்க வைத்துக்கொண்டிருந்தது அமெரிக்கா.
பதிலடியை கொடுக்க, இப்படியே போனால் நம்மால் சமாளிக்க முடியாது என்பதை அமெரிக்கா புரிந்துக்கொண்டது. இந்த பின்னணியில்தான் 2015ல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு 'JCPOA' என்று பெயர். ஈரான் மீது நாங்கள் போட்டிருந்த பொருளாதார தடையை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். நீங்கள் எந்த நாட்டுடன் வேண்டுமானலும் பிசினஸ் செய்துக்கொள்ளுங்கள். ஆனால் அணு சக்தியை ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்த மாட்டோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் அமெரிக்கா கூறியிருந்தது.
அணுசக்தியை வைத்திருக்கும் நாடுகள், அதை ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தாது என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? என்று கேள்வி எழலாம். இதற்கு சில கணக்கீடுகள் இருக்கின்றன. ரொம்ப சிம்பிள்தான். அணுசக்தியை பயன்படுத்த யுரேனியம் அவசியம். இதை பூமியிலிருந்து எடுத்து அப்படியே பயன்படுத்த முடியாது, அதை செறிவூட்ட வேண்டும். ADVERTISEMENT (1) -
அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் 5-19.75% செறிவூட்டப்பட்டால் போதும். இதையே 90% செறிவூட்டினால் அணு ஆயுதம் தயாரிக்கலாம்.
போர் நிறுத்தம் பேசும் "மிலிட்டரி நீ எங்கய்யா இங்கே!"" மின்சார உற்பத்திக்கு - 5 முதல் 19.75% வரை ஆயுத உற்பத்திக்கு - 90% வரை இதுதான் கணக்கு. ஈரான் எந்த அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டுகிறது என்பதை வைத்து, அது ஆயுதம் தயாரிக்கிறதா? மின்சாரம் தயாரிக்கிறதா என்பதை கண்டுபிடித்துவிடலாம். 2015 முதல் 2018 வரை எல்லாம் பிரச்சனையில்லாமல் போய்க்கொண்டிருந்தது. ஆனால் டிரம்ப் முதல் முறையாக அதிபராக வந்த காலத்தில், 'JCPOA' ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா 'ஜகா' வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். மட்டுமல்லாது ஈரான் மீதான் தடையும் தொடர்வதாக கூறினார்.
" இது ஈரானை அப்செட் செய்தது. எனவே, யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரிக்க தொடங்கியது. இப்போது 60% வரை செறிவூட்டியுள்ளது. 90க்கும் 60க்கும் இடையில் கேப் இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம். சிக்கல் என்னவெனில், 60லிருந்து 90% வரை செறிவூட்ட மிக குறைந்த நேரம் போதும். சட்டுனு அணு ஆயுதத்திற்கு தேவையான யுரேனியம் தயாராகிவிடும். இந்த அச்சத்தில்தான் இஸ்ரேல் ஈரானை தாக்கியதாக கூறுகிறது. இன்று நடந்த தாக்குதலுக்கு முன்னதாக, ஏறத்தாழ 10 ஆண்டுகளாக பல வகைகளில் இஸ்ரேல் ஈரானை தாக்கி வந்திருக்கிறது.
கடந்த 2010ல் சைபர் தாக்குதல் (ஸ்டக்ஸ்நெட்) 2020ல் - மொஹ்சென் ஃபக்ரிசாதே போன்ற அணு விஞ்ஞானிகளைக் கொன்றது 2024ல் - ஈரானின் 'தலேகன் 2' ஏவுகணைகள் மற்றும் விநியோக அமைப்புகள் மீது தாக்குல் நடத்தியது என அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையில், உரசல்கள் இருந்த வந்தன. அந்த உரசல்களின் உச்சமாகவே இன்று நடந்த தாக்குதல்கள். இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.