சிலியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கட்டடங்களில் இருந்து அலறியடித்து வெளியேறிய மக்கள்
07 Jun,2025
அமெரிக்க நாடான சிலியில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அலறி அடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். வடக்கு சிலி கடற்கரையை ஒட்டிய பகுதியில் 104 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் குலுங்கின. நில நடுக்கத்தை அதிர்வால் கட்டிடங்களின் வெளி புறத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்தன. கட்டிடங்களை விட்டு மக்கள் அலறி அடித்து சாலைகளுக்கு வந்தனர். மால்களில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் சிதறின. நில நடுக்கத்தின் காரணமாக மலை பாதைகளில் சிறிய அளவிலான நில சரிவு ஏற்பட்டது. கோவியாகோவில் உள்ள வானொலி நிலையத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள பெண் வேட்பாளர் பேட்டி அளித்து கொண்டிருந்த போது நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்ட காணொளி உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்பு பெரிய அளவு இல்லை என்றும் உயிர் சேதம் நேரவில்லை என்றும் அந்நாட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுனாமி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.